Services
Facilities available and details of amenities offered
Facilities available and details of amenities offered
கண்புரை பார்வை குறைவதற்கு ஒரு காரணம். கண் மருத்துவர் பரிசோதித்த பிறகு சிலருக்கு அறுவை சிகிச்சை அறிவுறுத்தப்படும். அதி நவீன கருவிகள் மூலம் கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஒளிபுகா வண்ணம் மாறியுள்ள லென்ஸை அகற்றி, உயர் தர செயற்கை லென்ஸ் பொருத்தப்படும்.
Cloudiness of the natural lens is one of the reasons for poor vision. After examination, your eye doctor may advise cataract surgery. Removal of cataractous lens is done using the latest phacoemulsification technique. Implantation of high-quality intraocular lens is carried out.
விழித்திரை நோயாளிகள் சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். விழித்திரை அறுவைசிகிச்சையானது குறிப்பிட்ட மையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், கண்களில் அடி பட்டவர்கள், விழித்திரை பிரிந்துள்ளவர்கள், சிக்கலான கண் புரை உள்ளவர்கள் போன்ற நபர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.
Retinal surgery may be required for a few patients who have retinal problems and is performed at specialized centres with retina specialists. Diabetic retinopathy, eye injuries, retinal detachment, complex cataracts are some of the disorders for which retinal surgery may be recommended.
நீரிழிவு நோயினால் வரும் விழித்திரை பாதிப்பு, வயது சம்மந்தமான விழித்திரை பாதிப்பு மற்றும் விழித்திரையில் இரத்தக்குழாய் அடைபடுத்தல் போன்ற நோய்களுக்கு கண்ணின் உள் ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்படலாம். மேற்கூறிய நாள்பட்ட நோய்களுக்கு விழித்திரை சிகிச்சை நிபுணரிடம் தொடர் சிகிச்சை தேவைப்படும். இருக்கும் பார்வையை காப்பாற்ற, மருத்தவ ஆலோசனையின் பிறகு கண் ஊசிகள் பரிந்துரைக்கப்படலாம்.
Patients with diabetic retinopathy, age related macular degeneration or retinal vein occlusion may require injections in the eye. Repeated injections may be required after regular consultation with a retina specialist. This is mainly aimed at saving existing vision.
கண்களின் முன் இருக்கும் தெளிவான கண்ணாடி போன்ற திசுவை கருவிழி என்கிறோம். இயற்கையாகவோ, அடிபட்டதின் காரணமாகவோ, கிருமிகளின் காரணமாகவோ, அலர்ஜியின் காரணமாகவோ சில நோயாளிகளுக்கு கருவிழி பாதிப்புகள் ஏற்படலாம்.
Cornea refers to the clear glass like structure in front of the eyes. In some patients, it is affected due to natural processes, injury, allergy or infection. After examination, the eye doctor recommends appropriate treatment based on severity.
கண்ணீர் அழுத்த நோய்கள், நோயாளிக்கு எந்த அறிகுறியுமின்றி, கண்பார்வையை குறைக்கும். சொட்டு மருந்துகளின் மூலம் கண் அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
Glaucoma refers to a group of disorders where eye pressure may be elevated. This leads to gradual painless loss of vision. Control of eye pressure is achieved with use of specific eye drops. Rarely, surgery may be required.
கண்களுக்குள் இருக்கும் மென்மையான சதைகள் கிருமிகளாலோ அலர்ஜியினாலோ வீக்கமடையலாம். இந்த நோயாளிகளுக்கு கண் பார்வை குறைபாடு, கண்ணீர் கசிதல், கண் சிவத்தல், கண் வலி போன்ற அறிகுறிகள் இருக்கலாம். இதற்கு, பரிசோதனைக்குப்பிறகு, கண் மருத்துவர் குறிப்பிட்ட சோதனைகளை செய்து சிகிச்சை அளிப்பார்.
Delicate intra-ocular tissues can become inflamed due to autoimmune or infectious processes. Patients have decreased vision, eye pain, redness and/or watering. For these inflammatory disorders, the eye doctor requests specific investigations and provides treatment based on their results.
நீரிழிவு நோயின் விழித்திரை பாதிப்பு உள்ளவர்கள், விழித்திரை துளைகள் உள்ளவர்கள் அல்லது விழித்திரையில் இரத்தக்குழாய் அடைபட்டவர்களுக்கு, விழித்திரை லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது புறநோயாளிகள் பகுதியில் செய்யப்படும் சிகிச்சையாகும். இது கண்ணாடியை அகற்றும் லேசர் சிகிச்சையிலிருந்து மாறுபட்டது.
Patients with diabetic retinopathy, retinal holes and vein occlusions may require retinal laser therapy. It is done by your retina doctor as an outpatient procedure. This retinal laser is different from LASIK that is performed to correct spectacle power.
கண்களின் நிலையையும் செயல்பாட்டையும் அறிய பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. இவற்றை, சிகிச்சைக்கு முன்னரும், சிகிச்சை தொடர்ந்துகொண்டிருக்கும் பொழுதும் கண் மருத்துவர் மேற்கொள்ளலாம். பரிசோதனை முடிவுகள் கண் சிகிச்சை முறைகளே சீர்செய்ய உதவும்.
Investigations are required to assess the structure and function of your eyes. These may be done before starting treatment or during the course of treatment. Results of such investigations help your eye doctor to fine tune treatment protocols.
கண் கண்ணாடியின் சக்தியை துல்லியமாக கணித்து, கண்ணாடிகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ்கள் பரிந்துரைக்கப்படும். மருத்துவமனையினுள் இயங்கும் கண்ணாடியகத்தில் உயர்தர கண் கண்ணாடிகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட லென்ஸ்கள் கிடைக்கின்றன.
After meticulous refraction, the eye power is estimated and spectacles or contact lenses are prescribed. High quality frames and lenses are available in the in-house dispensing unit.